%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+409+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 05 December 2017 - 15:40
இலங்கை அணிக்கு 409 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்
23

Shares
2,810

Views
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 409 ஓட்டங்களை இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியில் , தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சற்றுமுன்னர் 5 விக்கட் இழப்பிற்கு 246 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதில் தவான் 67 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

அணித்தலைவர் விராட் கோஹ்லி 50 ஓட்டங்களையும் , ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி7 விக்கட் இழப்பிற்கு 536 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 373 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் , போட்டியின் நான்காவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 246 ஓட்டங்களைப் பெற்று போட்டியை இடைநிறுத்தியுள்ளது.

அதன்படி , இலங்கை அணிக்கு 409 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி சமநிலையில் நிறைவடைந்திருந்த நிலையில் , இரண்டாவது போட்டியில் இந்திய அணி மாபெரும் வெற்றியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE