%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
Wednesday, 06 December 2017 - 11:37
மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட தினேஸ் சந்திமால்
4,063

Views
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட போட்டி இடம்பெறும்; டெல்லியின் கோட்லா மைதானத்தில் காற்று மாசுபாடு ஆபத்தான அளவில் இருப்பதாக இலங்கை வீரர்கள் தெரிவித்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதன் முதலிரண்டு டெஸ்டின் முடிவில், இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் டெல்லியில் தற்போது இடம்பெற்றுவருகிறது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்களை 536 ஒட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி, 9 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களை எடுத்திருந்தது.

நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில்; இந்திய அணி 163 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

இதில் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி வீரர்கள், மைதானத்தில் நிலவும் காற்று மாசுபாட்டால் சுவாச பிரச்சனை ஏற்படுவதாக நடுவரிடம் கூறினர்.

இதற்கான காரணம் தற்போது தெரியந்துள்ளது. அன்றைய தினத்தில் இந்திய அணி தலைவர் கோலி சராசரியாக 10 கி.மீ. வேகத்தில் ஓட்டங்களை எடுக்க 5,786 அடி ஓடியுள்ளார்.

அதில் தனக்காக 143 ஓட்டங்களும், தனது சக வீரருக்கான 120 ஓட்டங்களும் அடங்கும்.

இந்த நேரத்தில் இவர் சுமார் நாள் ஒன்றுக்கு 31 சிகரெட்டுகளை புகைத்த அளவு காற்றுமாசை தன்னுள் சுவாசித்துள்ளதாக டெல்லியின் காற்றுமாசு அளவு அறிக்கை தெரிவிக்கிறது.

இதேபோன்று இலங்கை அணியின் பந்து வீச்சாளர் சுரங்க லக்மல் 15 ஓவர்கள் வீச சராசரியாக 8 கி.மீ., வேகத்தில் சுமார் 2,700 அடி ஓடியுள்ளார்.

இது நாள் ஒன்றுக்கு 36 சிகரெட்களை பிடித்த அளவாகும்.

அதேபோன்று களத்தில் இருக்கும் களத்தடுப்பாளர்கள் 5 கி.,மீ. வேகத்தில் ஓடி பந்தை தடுப்பதால், நாள் ஒன்றுக்கு 27 சிகரெட் பிடித்த அளவு காற்றுமாசை சுவாசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்திலும் சுவாச பிரச்சனை காரணமாக இலங்கை அணியின் பந்து வீச்சாளர் சுரங்க லக்மல் வாந்தி எடுத்து சிறிது நேரம் ஓய்வறையில் இருந்தார்.

இதனுடன் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் அதிக நேரம் களத்தில் இருந்ததால் அவர் அதிகம் பாதிக்கப்பட்டார்.

மேலும் பாதியில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவருக்கு செயற்கை முறையிலான சுவாச காற்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE