%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Wednesday, 06 December 2017 - 13:15
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா வெற்றி
1,625

Views
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் அவுஸ்ரேலி அணிக்கும் இடையிலான ஏஸேஷ் (Ashes) கிண்ணத் தொடர் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றுள்ளது.

எடிலைட்டில் ( Adelaide) இடம்பெற்ற இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி தமது முதலாவது இனிங்சில் 8 விக்கட்டுக்களை இழந்து 422 ஓட்டங்களையும், இரண்டாவது இனிங்சில் 138 ஓட்டங்களையும் பெற்றது.

இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்சில் 227 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்சில் 233 ஓட்டங்களையும் பெற்றது.

இதன்படி, 5 போட்டிகளை கொண்ட தொடரில் அவுஸ்ரேலிய அணி 2க்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE