%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%3F
Thursday, 07 December 2017 - 7:44
இலங்கை கிரிக்கட் தொடர்பில் கடுமையான தீர்மானம்?
3,448

Views
நிர்வாக நடவடிக்கைகளை சரியாக செய்வதற்கு அதிகாரிகள் ஆதரவு வழங்காவிடின் கிரிக்கட் நிர்வாகம் கலைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்வி பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு சங்கங்களின் தேர்தல்களின் போது பக்கச்சார்பான வாக்குகளை பெற்று கொள்வதற்காக சில தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பக்கசார்பானவர்களின் ஆணைக்கு அடிபணிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலை மாறவேண்டும் என தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர், தேர்தலின் போது பயன்படுத்தப்படும் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான வாய்ப்பு தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE