%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 07 December 2017 - 12:09
தனது அடுத்த இலக்கு தொடர்பில் தினேஸ் சந்திமால்
88

Shares
10,562

Views
சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் மீண்டும் இடம்பெறுவதற்கு கடுமையாக முயற்சி எடுப்பதாக, இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடரில் தினேஷ் சந்திமால் இணைக்கப்படவில்லை.

ஆனால் தாம் இது குறித்து அதிருப்தி அடையவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளை தாம் அதிகம் நேசிப்பதாகவும், ஒருநாள்போட்டிகளைப் பொருத்தவரையில் தமக்கு இருக்கும் சில குறைப்பாடுகளை தணித்து, மீண்டும் அணியில் இடம்பெற கடுமையாக முயற்சி எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE