%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
Thursday, 07 December 2017 - 16:49
டெஸ்ட் தரவரிசையில் விராட் கோஹ்லி இரண்டாம் இடம்!
80

Shares
9,684

Views
இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு இரட்டை சதங்களுடன் 610 ஓட்டங்களை குவித்து தொடராட்ட நாயகன் விருதை தட்டிச்சென்ற விராட் கோஹ்லி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

சுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

மூன்று டெஸ்டில் 5 இன்னிங்சில் விராட் கோஹ்லி துடுப்பாடியிருந்தார்.  

இதில் இரண்டு இரட்டை சதங்கள், ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 610 ஓட்டங்களை குவித்தார்.

இதன்மூலம் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த விராட் கோஹ்லி 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது விராட் கோஹ்லி 893 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 938 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

ஜோ ரூட் 879 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

2-வது இடத்தில் இருந்த புஜாரா 873 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

4-வது இடத்தில் இருந்த கேன் வில்லியம்ஸ் 865 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

அவுஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் 815 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 795 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், பாகிஸ்தானின் அசார் அலி 755 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், டீன் எல்கர் 732 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமால் 743 புள்ளிகளுடன் 8 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் டெல்லி டெஸ்டில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE