BPL இறுதி போட்டியில் 6 சாதனைகளை படைத்து க்ரிஸ் கெயில் இமாலய சாதனை!! (காணொளி)

Wednesday, 13 December 2017 - 8:57

BPL+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+6+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
வங்கதேச பிரீமியர் லீக்: 18 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த கெயிலுக்கு குவியும் பாராட்டு
 
பங்களாதேஸ் பிரீமியர் லீக்கின் இறுதி போட்டி டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ரங்பூர் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. 

இதில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற டாக்கா டைமண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரராக சார்லசும், க்ரிஸ் கெயிலும் களமிறங்கினர்.

ஆனால், இரண்டாவது ஓவரில் ஜான்சன் ஆட்டமிழந்தார்.  அதன்பின் கெயிலுடன் மெக்கல்லம் களமிறங்கினார்.



இதையடுத்த் க்ரிஸ் கெயில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.

அவரது அதிரடிக்கு மெக்கல்லம் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்புக்கு 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

கெயில் 69 பந்துகளில் 18 ஆறு ஓட்டங்கள், 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 146 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருக்கு உறுதுணையாக இருந்த மெக்கல்லம் 43 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள், 4 நான்கு ஓட்டங்கள் அடித்து 51 ஒட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காமல் இருந்தார்.



இந்த ஆட்டத்தில் க்ரிஸ் கெயிலின் சாதனை துளிகள்:

*   18 சிக்சர்கள் அடித்துள்ளார்.
*   டி-20 கிரிக்கட்டில் 11,000 என்ற மைல் கல்லை தொட்ட முதல் துடுப்பாட்ட வீரர்.
*   டி-20 கிரிக்கட்டில் 20 சதங்கள் அடித்து அசத்தியவர்.
*   மொத்தம் 819 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தவர்.
*   பிபி எல்லில் 100 சிக்சர்கள் அடித்தவர்.
*   டி-20 இறுதி போட்டியில், மெக்கலமுடன் சேர்ந்து கெயில் 201 ஓட்டங்கள்  எடுத்து சாதனை படைத்துள்ளார். 

இதையடுத்து, டாக்கா டைனமைட்ஸ் அணி 202 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கியது.

அந்த அணியின் விக்கட் காப்பாளர் ஜஹ்ருல் இஸ்லாம் 38 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள், 4 நான்கு ஓட்டங்களுடன் 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மற்ற யாரும் தாக்குப் பிடிக்கவில்லை. 

இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்புக்கு 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதனால் ரங்பூர் ரைடர்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்த போட்டித் தொடரின் ஆட்ட நாயகன் மற்றும் தொடராட்ட நாயகன் விருதுகளை க்ரிஸ் கெயில் தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

சாதனைகள் படைத்து வரும் க்ரிஸ் கெயிலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
  

rnrn
rn







Exclusive Clips