ஒரு ஓவரில் 7 ஆறு ஓட்டங்களை விளாசி இலங்கை வீரர் சாதனை!!

Friday, 15 December 2017 - 13:21

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+7+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%21%21
ஒரு ஓவரில் 7 ஆறு ஓட்டங்களைப் பெற்ற இளம் வீரர் தொடர்பில் தெற்கு பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.

கடந்த தினத்தில் இடம்பெற்ற முரளி கிண்ணத்தில் தனது அணியை வெற்றியை நோக்கி இட்டுச் சென்ற இளம் வீரரான நவிந்து பெஹெசர 87 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ஹக்கடுவை சுமங்கல வித்தியாலய கிரிக்கட் மைதானத்தில் கடந்த தினத்தில் 15 வயதுக்குட்பட்ட இந்த கிரிக்கட் போட்டி இடம்பெற்றது.

கொட்டாவை தர்மபால வித்தியாலய அணி மற்றும் Fog Academy கிரிக்கட் அணிகளுக்கிடையில் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடித்தாடிய Fog Academy அணி 36 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 283 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் , Fog Academy அணிக்காக விளையாடிய நவிந்து பெஹெசர 87 பந்துகளுக்கு 109 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியின் போது , இவர் ஒரு ஓவரில் முறையற்ற பந்தொன்றுக்கு அடித்த ஆறு ஓட்டம் அடங்களாக 7 ஆறு ஓட்டங்களைப் பெற்றிருந்தது அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.

கிரிக்கட் உலகில் இதுபோன்ற சாதனை இதற்கு முன்னர் பதிவாகவில்லை எனபது சிறப்பம்சமாகும்.

இந்நிலையில் , பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தர்மபால வித்தியாலய அணி 72 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதன்படி , Fog Academy அணி இந்த போட்டியில் 211 என்ற ஓட்டங்களால் மாபெரும் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்த போட்டியின் சிறப்பு விருந்தினராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



          









Exclusive Clips