ஆஷஸ் தொடர் - ஸ்மித் , மிச்சல் மார்ஸ் அபாரம்!

Saturday, 16 December 2017 - 14:25

%E0%AE%86%E0%AE%B7%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%2C+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் ஆஷஸ் தொடரின் 3வது போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
 
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் அவுஸ்திரேலியா அணி சற்று முன்னர் அவரை 4 விக்கட்டுக்களை இழந்து 501 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிவரும் அணித்தலைவர் ஸ்மித் 207 ஓட்டங்களுடனும் மற்றும் மிச்சல் மார்ஸ் 143 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
 
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 403 ஓட்டங்களை பெற்றது.
 
இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் மலான் 140 ஓட்டங்களையும் ஜொனி பேர்ஸ்டோவ் 119 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்று கொடுத்தனர்.
 
முன்னதாக இடம்பெற்ற ஆஷஸ் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2க்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips