உலகின் முன்னணி வீரர்களை பின்தள்ளி சாதனை படைப்பாரா ஹெர்ரி கேன்

Sunday, 24 December 2017 - 19:29

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D
உலகின் முன்னணி வீரர்களை பின்தள்ளி இந்த வருடத்தில் அதிக கோல்களை பெற்றுக்கொண்ட வீரர்களின் பட்டியலில் ஹெர்ரி கேன் முன்னிலை பெறும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

கால்பந்தாட்டத்தில் லயனல் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் முன்னணி வீரர்களாக திகழ்கின்றனர்.

இந்த ஆண்டில் மெஸ்சி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக 54 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி இருப்பார் முதன்மை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் நேற்று டோட்டன்ஹேம் ஸ்பர்ஸ் அணிக்கும் புர்ன்லே அணிக்கும் இடையில் போன்டியொன்று இடம்பெற்றது.

இந்த போட்டியில் டோட்டன்ஹேம் ஸ்பர்ஸ் அணி சார்பில் ஹர்ரி கேன் 3 கோல்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர் இந்த வருடத்தில் ஹர்ரி கேனின் 7-வது ஹெட்ரிட் கோல் இதுவாகும்.

இந்த கோல்கள் மூலம் ஹெர்ரி கேன் மொத்தமாக 53 கோல்கள் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் டோட்டன்ஹேம் ஸ்பர்ஸ் அணி எதிர்வரும் 26 ஆம் திகதி மற்றுமொரு போட்டியில் கலந்துகொள்ளவுள்ளது.

இந்த போட்டியில் ஹெர்ரி கேன் கோல்கள் பெறும் பட்சத்தில் லயனல் மெசியின் கோல் எண்ணிக்கையை சமன் செய்வதற்கோ அல்லது முன்னிலைப் பெறுவதற்கோ சந்தர்ப்பம் உள்ளது.







Exclusive Clips