%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%3F+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF..
Saturday, 13 January 2018 - 11:55
அதிரடி தீர்மானம்..? ரசிகர்கள் அதிர்ச்சி..
24

Shares
2,968

Views
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை ஏ.கிரேட் பட்டியலில் இருந்து நீக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போதுள்ள இந்திய அணி வீரர்களை A,B,C  என மூன்று வகையாக பிரித்து A  கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடியும், B கிரேடு வீரர்களுக்கு ரூ. 1கோடியும், C கிரேடு வீரர்கள் ரூ. 50 லட்சமும் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வீரர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என கோலி, தோனி, ரவி சாஸ்திரி தலைமையில் பிசிசிஐ தலைவர் வினோத் ராயிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில்  A,B,C கிரேடுடன் A+  என்ற கிரேடை புதிதாக சேர்க்க பி.சி.சி. ஐ திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் விளையாடாத தோனி அதே A கிரேடிலும், ஏனைய முன்னனி வீரர்கள் A+  கிரேடில் வைத்துவிட்டு, தோனியை A கிரேடிலேயே நீட்டிக்கக் கூடும் என தெரிகிறது.

இப்படி தோனியின் சம்பளத்தில் கை வைக்க பி.சி.சி.ஐ புதிய திட்டத்தை தீட்டி வருகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE