%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+183+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Saturday, 13 January 2018 - 12:54
நியூசிலாந்து அணி 183 ஓட்டங்களால் வெற்றி
108

Shares
13,064

Views
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிடையில் இடம்பெற்ற 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து அணி 183 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
 
போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களை பெற்றது.
 
அந்த அணி சார்பில் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.
 
பந்து வீச்சில் ஹசன் அலி மற்றும் ரம்மன் ரைஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.
 
இதனை தொடர்ந்து தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 27.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 74 ஓட்டங்களையே பெற்று தோல்வியை தழுவியது.
 
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் ட்ரேன்ட் போல்ட் 17 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை நியூசிலாந்து அணி 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், 3க்கு பூச்சியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE