டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் : 8-வது சுற்றை சமன் செய்தார் விஷ்வநாதன் ஆனந்த்

Monday, 22 January 2018 - 8:12

%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%3A+8-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் (Tata Steel Masters ) சதுரங்க தொடரின் 8வது சுற்றில் ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லெருடனான போட்டியை, இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சமன் செய்தார்.

80வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சதுரங்க தொடர் நெதர்லாந்தில் இடம்பெறுகிறது.

இந்த தொடரில் நடப்பு உலக சாம்பியன் நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட 14 முண்ணனி வீரர்கள் பங்கு கொள்கின்றனர்.

இதன் 8வது சுற்றில், விஷ்வநாதன் ஆனந்த் மற்றும் ரஷ்யாவின் பீட்டர் ஸ்விட்லெர் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டி சமனிலையில் நிறைவடைய, 8 சுற்றுக்கள் முடிவில், 2 வெற்றிகள், 5 சமநிலைகள் மற்றும் ஒரு தோல்வி என 4.5 புள்ளிகளுடன் ஆனந்த், 3வது இடத்தில் உள்ளார்.

இன்னும் 5 சுற்றுகள் மீதமுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றும் பச்சத்திலேயே, ஆனந்த் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பை பெறுவார்.

இதற்கு முன்னர் ஆனந்த ஐந்து முறை டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips