போட்டியை மாற்றியத்து , நடுவர்களை தர்மசங்கடத்திற்கு உட்படுத்தி , விக்கட் காப்பாளரால் எடுக்கப்பட்ட பிடியெடுப்பு

Monday, 22 January 2018 - 11:33

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%2C+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%2C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணிசார்பில் துடுப்பாட்டத்தில் ஜோஸ் பட்லர்  ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இதற்கமைய, 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து அணி கைபற்றியது.

இந்த போட்டியில் , அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 45 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் துரதிஷ்டவசமாக விக்கட் காப்பாளர் ஜோஸ் பட்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

எவ்வாறாயினும் , குறித்த பிடியெடுப்பு தொடர்பில் மூன்றாவது நடுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் , நீண்ட ஆய்வுக்கு பின்னர் அது ஆட்டமிழப்பு என மூன்றாவது நடுவரால் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் , குறித்த பிடியெடுப்பு கிரிக்கட் விமர்சகர்கள் மத்தியில் தொடர்ந்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.

குறித்த சர்ச்சைக்குரிய பிடியெடுப்பு கீழே...

rnrnrn







Exclusive Clips