%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Monday, 12 February 2018 - 19:39
சர்வதேச டெனிஸ் போட்டி இன்று ஆரம்பம்
138

Views
நெதலாந்து ரோட்டர்டாம் நகரில் சர்வதேச டெனிஸ் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

இந்த போட்டித்தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அதேவேளை, அண்மையில் அவுஸ்திலேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்த சுவிஸ்சலாந்தை சேர்ந்த ரொஜர் பெடரர் இந்த போட்டியில் பங்குகொள்கிறார்.

முதல் சுற்றில் பெல்ஜியத்தை சேர்ந்த தகுதி நிலை வீரர் ருபென் பிமெல்மன்சை எதிர்கொள்கிறார்.

தற்போது, 2வது இடத்தில் உள்ள 36 வயதான ரொஜர் பெடரர், இந்த தொடரில், அரை இறுதியை எட்டினால் ஸ்பெயினை சேர்ந்த ரபல் நடாலை பின்தள்ளி மீண்டும் முதலிடத்தை அடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிகழும் பட்சத்தில், அதிக வயதான நிலையில், முதலாம் இடத்தை வீரர் என்ற சாதனையை செய்தவர் என்ற சாதனையை படைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE