%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+
Wednesday, 14 February 2018 - 21:36
மீண்டும் முதலிடத்தை பிடித்த இந்தியா
70

Views
ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளின் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்று வரும் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை இந்திய அணி ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 4க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த தொடரில் 4 போட்டிகளை வெற்றி கொண்டதன் மூலம், 122 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி முதலாம் இடத்தை பிடித்தது.

118 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

3வது இடத்தில் 116 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி உள்ளது.

4ஆம் மற்றும் 5ஆம் இடங்களில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் முறையே 115 மற்றும் 112 புள்ளிகளுடன் உள்ளன.

இந்த பட்டியலில் இலங்கை அணி, 84 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE