உலக கிண்ண ஹொக்கி போட்டியில் பாகிஸ்தான்

Friday, 16 February 2018 - 20:19

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
இந்தியாவில் நடைபெறவுள்ள 14வது உலக கிண்ண ஹொக்கி போட்டியில், பாக்கிஸ்தான் அணியும் பங்குகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கிண்ண ஹொக்கி போட்டி ஒரிசா மாநிலத்தில் எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 16ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த போட்டி தொடரில் 16 அணிகள் பங்குகொள்கின்றன.

நான்கு முறை வெற்றி கிண்ணத்தை பெற்ற பாக்கிஸ்தான் அணி, உலக ஹொக்கி போட்டிக்கு தகுதியை பெறாத போதிலும், லண்டனில் நடந்த உலக ஹொக்கி லீக் அரை இறுதி போட்டித் தொடரில் 7வது இடத்தை பெற்றது.

அத்துடன் ஐரோப்பிய ஹொக்கி போட்டி முடிவுகளும் பாக்கிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது.

இதன் காரணமாக பாக்கிஸ்தான் அணி 13வது அணியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதேவேளை, அரசியல் காரணமாக பாக்கிஸ்தான் அணி இந்தியாவிற்கு வருகை தந்து விளையாடுவது குறித்து பலதரப்பினரும் எதிர்ப்பை வெளியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







Exclusive Clips