குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நோர்வே தொடர்ந்தும் ஆதிக்கம்

Tuesday, 20 February 2018 - 19:15

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+
தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் பெற்ற நாடுகளில் நோர்வே முன்னணியில் உள்ளது.

நோர்வே 11 தங்கம் 9 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்ளை பெற்று மொத்தமாக 28 பதக்கங்களை பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஜேர்மனி 10 தங்கம் 6 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களை பெற்று மொத்தமாக 20 பதக்கங்களை பெற்றுள்ளது.

மூன்றாவது நிலையில், கனடா 8 தங்கம் 5 வெள்ளி 6 வெண்கல பதக்கங்களை பெற்று மொத்தமாக 19 பதக்கங்களை பெற்றுள்ளது.
நான்வாது இடத்தை பிடித்துள்ள நெதர்லாந்து 6 தங்கம் 5 வெள்ளி 2 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 13 பதக்கங்களை பெற்றுள்ளது.

அமெரிக்கா, 5 தங்கம் 3 வெள்ளி 4 வெண்கல பதக்கங்களை பெற்று மொத்தமாக 12 பதக்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஆறாம் ஏழாம் இடங்களை பிரான்ஸ் மற்றும் சுவீடன் அணிகள் பிடித்துள்ளன.

எட்டாம், ஒன்பதாம் மற்றும் 10 ஆம் இடங்களை முறையே ஒஸ்ரியா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் பிடித்துள்ளன.







Exclusive Clips