I.C.C தரவரிசையில் முதலாம் இடத்தை பிடித்த 19 வயதான ரஷீட் கான்

Wednesday, 21 February 2018 - 15:18

I.C.C++%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+19+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சுதந்திர கிண்ணப் போட்டித் தொடரில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் செஹான் மதுசாங்க பங்கேற்பது நிச்சியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பங்களாதேஸ் அணியுடனான இறுதி இருபதுக்கு இருபது போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
 
இதனை அடுத்து அவருக்கு எம்.ஆர்.ஜ சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
 
இந்தநிலையில் அடுத்த மாதம் 6 ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் அவர் பங்கேற்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
சுதந்திர கிண்ண முக்கோண தொடரில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்குகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே, ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான புதிய தரப்படுத்தல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 
அதில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீட் பும்ரா  ஆகியோர் முதலாம் இடத்தை இடத்துள்ளனர்.
 
19 வயதான ரஷீட் கான் சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் முதலாம் இடத்தை பிடித்த முதல் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 
அத்துடன், ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கட் தரவரிசையில் முதலாம் இடத்தை பிடித்த முதல் சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.
 
சிம்பாம்வே அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் அவர் 16 விக்கட்டுக்களை பெற்ற நிலையிலேயே அவர் தரப்பட்டியலில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
 
 







Exclusive Clips