முக்கோண ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பிரபல வீரர் இல்லை..!!

Thursday, 22 February 2018 - 12:35

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..%21%21
இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அலேச குணரத்ன இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கோண ஒருநாள் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக, சுதந்திர கிண்ண முக்கோண தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்குகொள்ளும் சுதந்திர கிண்ண முக்கோண ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை சுற்றுலா இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

செஞ்சூரியனில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் மனிஸ் பாண்டே 79 ஓட்டங்களையும்இ மகேந்திர சிங் டோனி 52 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.

பதலிளித்த தென்னரிக்க அணி 18.4 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஜே.பி டுமினி ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களையும்இ ஹெய்ன்ரிக் க்ளாசென் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படிஇ 3 போட்டிகளைக் கொண்ட இந்த இருபதுக்கு இருபது தொடர் தற்போது ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலையில் உள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி இருபதுக்கு இருபது போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.













Exclusive Clips