குளிர்க்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நோர்வே தொடர்ந்தும் முதல் இடத்தில்

Thursday, 22 February 2018 - 18:49

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
தென்கொரியாவில் இடம்பெற்று வரும் குளிர்க்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நோர்வே தொடர்ந்தும் முதலாவது இடத்தில் உள்ளது.

நோர்வே 13 தங்கம் 12 வெள்ளி 9 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 34 பதக்கங்களை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து, 2வது இடத்தில் 13 தங்கம் 7 வெள்ளி, 5 வெண்கலம் அடங்களாக மொத்தம் 25 பதக்கங்களை பெற்று ஜேர்மன் உள்ளது.

கனடா, 9 தங்கம் 7 வெள்ளி, 7 வெண்கலம் உட்பட 23 பதக்கங்களை சுவீகரித்து 3வது இடத்தில் உள்ளது.

5வது இடத்தில் இருந்த ஐக்கிய அமெரிக்கா, 8 தங்கம் 7 வெள்ளி 6 வெண்கலம் அடங்களாக மொதம் 21 பதக்கங்களை வென்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

5வது இடத்தில் மொத்தம் 17 பதக்கங்களை பெற்று நெதர்லாந்து உள்ளது.

போட்டியை நடத்தும் நாடான தென்கொரிய 4 தங்கள் உள்ளடங்களாக மொத்தம் 11 பதக்கங்களை கைப்பற்றி 9 வது இடத்தில் உள்ளது.







Exclusive Clips