மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய சங்கா!!

Saturday, 24 February 2018 - 7:41

%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%21%21
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவின் பங்களிப்புடன் முல்தான் சுல்தான் அணி மேலும் ஒரு வெற்றியை பெற்றது.

லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு எதிராக முல்தான் சுல்தான் அணி நேற்று விளையாடியது.

இதில் முதலில் துடுப்பாடிய முல்தான் சுல்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் , 5 விக்கட்டுகளை இழந்து, 179 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பில் குமார் சங்கக்கார அதிரடியாக துடுப்பாடி 63 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலளித்து துடுப்பாடிய லாகூர் கலாண்டர்ஸ் அணி, 17.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும், இழந்த 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்து வீச்சில் முல்தான் சுல்தான் அணி சார்பில் இம்ரான் தாஹிர் மற்றும் ஜூனையிட் கான் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியதுடன், ஜூனைட் கான் ஹெற்றிக் சாதனை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குமார் சங்கக்கார இதற்கு முன்னர் இடம்பெற்ற போட்டியில் 57 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

rn
rn
rn







Exclusive Clips