%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95++%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 13 March 2018 - 21:49
இங்கிலாந்து அணியின் உபதலைவராக ஜேம்ஸ் அண்டர்சனையே தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானம்
79

Views
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் உபத்தலைவராக தொடர்ந்தும் ஜேம்ஸ் அண்டர்சனையே பேணுவதற்கு இங்கிலாந்து கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு உபத்தலைவராக இருந்த பென் ஸ்டாக்ஸ், தாக்குதல் சம்பவம் ஒன்றில் தொடர்பு கொண்டுள்ளமையால், அணியில் இருந்து சிறிது காலம் நீக்கப்பட்டிருந்தார்.

இந்த காலப்பகுதிக்குள் அன்டர்சன் உபத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

தற்போது பென் ஸ்டாக்ஸுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், உபத்தலைவர் பதவியையையும் பென் ஸ்டாக்ஸுக்கு வழங்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

ஆனால் பென் ஸ்டாக்ஸின் வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறவுள்ள நிலையில், அன்டர்ஸசனையே தொடர்ந்தும் உபத்தலைவராக பேணுவதற்கு இங்கிலாந்து கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE