+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+-+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
Wednesday, 14 March 2018 - 20:52
ரோஹித் சர்மா அதிரடி - தீர்மானமிக்க போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு கிடைத்த இலக்கு
4,114

Views
சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இன்று இடம்பெற்றுவரும் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 177 என்ற வெற்றி இலக்கை இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 61 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் , சுரேஷ் ரய்னா 47 ஓட்டங்களையும் , சிகர் தவான் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் Rubel Hossain  இரண்டு விக்கட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE