இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

Wednesday, 14 March 2018 - 22:58

%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை 17 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 61 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் , சுரேஷ் ரய்னா 47 ஓட்டங்களையும் , சிகர் தவான் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் Rubel Hossain  இரண்டு விக்கட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அந்த அணி சார்பில் முஷ்பிகுர் ரஹீம் 72 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.

தமிம் இக்பால் 27 ஓட்டங்களையும் சபீர் ரஹுமான் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் , வாசிங்டன் சுந்தர் மூன்று விக்கட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.

அதன்படி , மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ள இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாளை மறுதினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெறவுள்ள நிலையில், இதில் வெற்றிப்பெறும் அணி இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Exclusive Clips