ரபாடா மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Tuesday, 20 March 2018 - 19:46

%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடாவுக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு போட்டிகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் முன்னிலையில், ரபாடா தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், சர்வதேச கிரிக்கட் பேரவை, அவருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது.

இதற்கு எதிராக தென்னாபிரிக்க கிரிக்கட் சபை மேன்முறையீடு செய்திருந்த நிலையில், ரபாடாவிடம் நேற்று 6 மணிநேர விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டு, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான எதிர்வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கேப்டவுனில் இடம்பெற உள்ளது.

நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips