%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+8+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 11 April 2018 - 18:43
திடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்
20

Shares
2,488

Views
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற கெமரூன் நாட்டை சேர்ந்த 8 வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

இதனை கெமரூன் அணியின் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியமரும் நோக்கில் தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆறு வீரர்களும், இரண்டு வீரங்கனைகளும் இவ்வாறு மாயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வீரர்கள் குத்துச் சண்டை மற்றும் பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்தவர்கள் என அணியின் பிரதானி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் காணாமல் போயுள்ளவர்களின் விசா காலம் அடுத்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் அந்நாட்டு காவல்துறை ஈடுபட்டுள்ளது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE