அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் பொதுநல வாய விளையாட்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
69 தங்கம், 52 வெள்ளி, 55 வெண்கலம் அடங்களாக மொத்தம் 176 பதங்கங்களை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது இடத்தில் 37 தங்கம் , 36 வெள்ளி, 37 வெண்கலம் அடங்களாக மொத்தம் 110 பதக்கங்களை வென்று இங்கிலாந்து உள்ளது.
இந்தியா, 20 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் அடங்களாக மொத்தம் 47 பதக்கங்களை வென்று 3வது இடத்தில் உள்ளது.
இதனை தொடர்ந்து 4 வது இடத்தில் கனடா 14 தங்கம் அடங்களாக மொத்தம் 76 பதக்கங்களை வென்று உள்ளது.
5வது இடத்தில் 13 தங்கம் உள்ளடங்களாக மொத்தம் 36 பதக்கங்களை வென்று தென்னாபிரிக்கா உள்ளது.
இந்த பட்டியலில் இலங்கை ஒரு வெள்ளி 5 வெண்கலம் அடங்களாக மொத்தம் 6 பதக்கங்களை வென்று 28வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.