என்ரு ரசல் மீண்டும் அதிரடி..! 200 ஓட்டங்களை குவித்தது கொல்கத்தா!!

Monday, 16 April 2018 - 21:57

%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF..%21+200+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%21%21
கொல்கத்தா ஈடன்காடின் மைதானத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் 201 என்ற வெற்றி இலக்கு டெல்லி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில், தினேஷ் கார்த்திக்கின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடேர்ஸ் அணியும் கௌதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேயார் டெவில் அணியும் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட் இழப்பிற்கு 200 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக நிதிஸ் ராணா 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய என்ரு ரசல் 12 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் ராகுல் தெவாடியா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இறுதி பந்து ஓவரில் அவர் இந்த விக்கட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips