பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் நஜாம் சேதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளை, பாகிஸ்தான் பொறுப்புடைமை பணிமனை நிராகரித்துள்ளது.
நஜாம் சேதிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஃப்ராஸ் நவாஸ் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார்.
தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக கடந்த பல ஆண்டுகளாக அவர் இந்த குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த பாகிஸ்தானின் பொறுப்புடைமை பணிமனை, அவை அடிப்படையற்றவை என்று தெரிவித்துள்ளது.