இறுதிப் போட்டிக்கு தகுதி பெற சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு!!

Tuesday, 22 May 2018 - 20:48

%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%21%21
11ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி காண் போட்டியில் சென்னை அணிக்கு 140 என்ற வெற்றி இலக்கு நிர்யணிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி மும்பையில் இடம்பெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி களத்தடுப்பை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய கார்லோஸ் ப்ராத்வாட் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

4 ஆறு ஓட்டங்கள் மற்றும் ஒரு நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் பிராவோ இரணடு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips