ஐ.சி.சி விசாரணை..

Sunday, 27 May 2018 - 10:00

%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88..
இலங்கையில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் போது மைதானப் பராமரிப்பாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, ஆடுகளத்தை மாற்றியமைத்தது உண்மையா என ஐ.சி.சி விசாரணை நடத்தி வருகிறது.

காலி  மைதானப் பராமரிப்பாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, ஆடுகளத்தை மாற்றியமைக்க ஒப்புக் கொண்டதாக ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப் படத்தில் தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.சி.சி முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.

குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உறுப்பு நாடுகளின் ஊழல் தடுப்பு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, என கூறியுள்ளது.
 
கடந்த 2016ல் ஆவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றது.

அப்போது மைதான பராமரிப்பாளர்களுக்கு லஞ்சமாக ஒரு பெரிய தொகை, ஸ்பாட் பிக்ஸிங் செய்யும் கும்பலால் வழங்கப்பட்டிருப்பதாக ஆவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.










Exclusive Clips