%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
Thursday, 14 June 2018 - 12:16
இலங்கை கிரிக்கட் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய அதிரடி உத்தரவு
2,066

Views
இலங்கை கிரிக்கட் தேர்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , கிரிக்கட் தேர்தலை மீண்டும் நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இம்மாதம் 31ம் திகதி இடம்பெறவிருந்த இந்த தேர்தலில் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுத்து இடைக்காலத் தடையுத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி நிசாந்த ரணதுங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட 27 பேர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக திலங்க சுமதிபாலவினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு விளையாட்டுத்துறை சட்டத்திற்கு எதிரானது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி , தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்பு மனுவை நீக்கி மீண்டும் வேட்பு மனுக்களை அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE