%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21%21
Thursday, 14 June 2018 - 15:37
இலங்கை அணி ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி!!
70

Shares
8,516

Views
சங்கா , மஹேல , முரளி உள்ளிட்ட 5 முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பைஸர்!!

இலங்கை அணியின் ஆலோசகராக இணைந்துக்கொள்ளுமாறு குமார் சங்கக்கார , அரவிந்த டி சில்வா , ரொஷான் மஹானாம , முத்தையா முரளிதரன் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகிய முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைவாக  இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவர்கள் தனது கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE