நடுவர்களின் செயலால் விளையாட மறுத்த இலங்கை அணி வீரர்கள்

Sunday, 17 June 2018 - 7:09

%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கட்டை இழந்து 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக சகல விக்கட்டுக்களையும் இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்று கொண்டது.

ஆட்டத்தின் போது, திடீரென நடுவர்களால் பந்து மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை அணி வீரர்கள் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக போட்டி இரண்டு மணி நேரம் தாமதமாகியது.

இலங்கை அணி பந்தின் தன்மையை மாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டு பந்தை மாற்ற போட்டி நடுவர்கள் தீர்மானித்த நிலையில் அந்த குற்றச்சாட்டை இலங்கை அணி முற்றாக மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 342 ஓட்டங்களை பெற்று கொண்டது.

பதிலளித்த அவுஸ்திரேலியா அணி 47.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 304 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 38 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன்படி. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ள இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.







Exclusive Clips