மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள அவுஸ்திரேலியா அணி

Monday, 18 June 2018 - 20:33

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் கடந்த 34 ஆண்டுகளில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

புதிதாக சர்வதேச கிரிக்கட் பேரவை ஒருநாள் தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் அவுஸ்திரேலியா 6ம் இடத்தில் உள்ளது.

கடந்த 34 ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணி தரப்படுத்தலில் வகித்த குறைந்த நிலை இதுவாகும்.

இந்த நிலைமையில் இருந்து அவுஸ்திரேலியா மீள்வதற்கு, பாகிஸ்தான் அணியுடன் எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வென்றாக வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதியத் தரப்படுத்தலில் இங்கிலாந்து அணி முதலில் உள்ளது.

இந்தியா இரண்டாம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 3ம் இடத்திலும் உள்ளன.

நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நான்காம், ஐந்தாம் இடங்களிலும், ஏழாம் இடத்தில் பங்களாதேஸும், எட்டாம் இடத்தில் இலங்கையும் உள்ளன.

ஒன்பதாம் இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் பத்தாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் இருக்கின்றன.







Exclusive Clips