+2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3++%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B
Thursday, 21 June 2018 - 9:02
2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள ரொனால்டோ
64

Shares
7,741

Views
2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் மேலும் மூன்று போட்டிகள் நேற்று இடம்பெற்றன.

குழு பீ யில் இடம்பெற்றுள்ள போர்த்துக்கல் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியில், போர்த்துக்கல் அணி 1க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அத்துடன், குழு ஏ யில் இடம்பெற்றுள்ள சவூதி அரேபியா மற்றும் உருகுவே ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் உருகுவே அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் வெற்றிப் பெற்றது.

மற்றுமொரு போட்டியில் குழு பீ யில் இடம்பெற்றுள்ள ஈரான் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஸ்பெயின் அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.

இதனிடையே, இன்றைய தினம் மேலும் மூன்று போட்டிகள் இடம்பெறவுள்ளன.

குழு சீ யில் இடம்பெற்றுள்ள டென்மார்க் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியும், பிரான்ஸ் மற்றும் பெரு அணிகளுக்கு இடையிலான போட்டியும், குழு (டி)யில் இடம்பெற்றுள்ள ஆர்ஜன்டினா மற்றும் குரேஸியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

இதேவேளை சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

காணொளி இணைப்பு




rn




rn

rn



------------------------------------------
rn



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE