%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%3F+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%3F
Friday, 22 June 2018 - 16:49
தோனி வீட்டில் இல்லாத போது மனைவி சாக்‌ஷிக்கு நடப்பது என்ன ? துப்பாக்கி எதற்கு?
4,961

Views
உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால் துப்பாக்கி உரிமம் கேட்டு இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியின் மனைவி சாக்‌ஷி விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்திய கிரிக்கட் அணியின் சாதனைத் தலைவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி.

இவர் தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.

அதன்பின் அவரது புகழ் உலகளாவிய அளவில் உயர்ந்தது.

நட்சத்திர வீரரான அவர், கடந்த 2010-ம் ஆண்டு தன் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் பெற்றார்.

இந்நிலையில் அவரது மனைவியான சாக்‌ஷி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எண்ணி, தற்போது துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

பிஸ்டல் அல்லது ரிவால்வர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு உரிமம் தரும்படி அவர் கேட்டுள்ளார்.

தோனி கிரிக்கட் விளையாட சென்றுவிடுவதால், தான் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தனியாக இருப்பதாகவும், மேலும் தனிப்பட்ட வேலைக் காரணமாக வெளியில் தனியாக செல்ல இருப்பதாலும், உயிருக்கு ஆபத்து உள்ளது.

இதனால் துப்பாக்கி வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று சாக்‌ஷி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2008-ம் ஆண்டு தோனி 9எம்எம் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

அதனை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக, தோனியிடம் நற்சான்றிதழ் வழங்குமாறு ராஞ்சி நிர்வாகம் கேட்டிருந்தது.

இந்த விவகாரம் காரணமாக அந்த சமயத்தில் அவருக்கு உரிமம் கிடைக்கவில்லை. அதன் பிறகு 2010-ல் தோனிக்கு உரிமம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE