%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+ICC+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Saturday, 23 June 2018 - 6:49
சந்திமாலின் மேன்முறையீடு தொடர்பில் ICC எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
4,035

Views
பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டை ஆட்சேபித்து இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் தினேஸ் சந்திமால் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒழுங்குவிதிகள் ஆணைக்குழுவின் தலைவர் மைக்கல் பெல்லோஃப் தலைமையிலான விசாரணைக் குழுவினால் நேற்றைய தினம் நான்கு மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அமர்வில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாபடோஸில் இன்று ஆரம்பமாகவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.

அத்துடன், தினேஸ் சந்திமாலுக்கு போட்டிப் பணத்தில் 100 சதவீத அபராத விதிப்பும் அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், குறித்த விசாரணை தொடர்பில் மைக்கல் பெல்லோஃப், எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை எழுத்துமூலமான பதிலளிப்பு ஒன்றையும் வழங்க உள்ளார்.

அத்துடன், சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒழுங்கு விதிகளை மீறியமை தொடர்பில் தினேஸ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இடம்பெற்ற இரண்டாவது போட்டியின் மூன்றாம்நாள் ஆட்டத்தின்போது இரண்டு மணித்தியாலங்கள் தாமதாக மைதானத்திற்கு வந்தமை குறித்து அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பயிற்றுவிப்பு மற்றும் முகாமைத்துவ பணிகளில் ஈடுபட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE