%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
Sunday, 24 June 2018 - 14:01
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு
14

Shares
1,755

Views
சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
 
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாக இது அமைந்துள்ளது.
 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
அதன்படி, அந்த அணி இன்றயை ஆட்டநேர முடிவு வரையில் 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 132 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
 
இதனிடையே ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்பட் இலங்கை அணியின் ஜெப்ரி வெண்டசே, மேற்கிந்திய தீவுகளில் இருந்து மீண்டும் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
 
இலங்கை அணியின் முகாமைத்துவத்தின் ஆலோசனையின் பேரிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE