%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AA+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 July 2018 - 10:02
இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் நியமனம்
20

Shares
2,502

Views
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினேஸ் சந்திமாலுக்கு சர்வதேக கிரிக்கட் சம்மேளனம் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ள நிலையில் , இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக சுரங்க லக்மால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

உப தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE