%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9
Thursday, 12 July 2018 - 17:55
சரிந்த இலங்கை அணியை அதிரடியாய் மீட்ட திமுத் கருணாரத்ன
2,095

Views
தென்னாபிரிக்கா மற்றும ்இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவின் போது தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 04 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஒட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக விளையாடிய திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

13 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக அவர் இந்த ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இது அவரது 8வது டெஸ்ட் சதமென்பது குறிப்பிடத்தக்கது.

லக்ஷான் சந்தகென் 25 ஓட்டங்களையும் , தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் ரபாடா 4 விக்கட்டுக்களையும் , சம்ஷி 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE