தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி இலக்கு

Saturday, 14 July 2018 - 11:58

+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிக்கு இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 190 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது.

இந்நிலையில், திமுத் கருணாரத்ன 60 ஓட்டங்களையும், மெத்தீவ்ஸ் 35 ஓட்டங்கள் மற்றும் சுரங்க லக்மால் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி தனது முதலாவது இனிங்சில் 287 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், தென் ஆப்ரிக்க அணி 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, இரண்டாவது இனிங்சில் இலங்கை அணி 190 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் தென் ஆப்ரிக்க அணிக்கு 352 ஓட்டங்கள் வெற்றி இலக்காகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Exclusive Clips