இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

Saturday, 21 July 2018 - 8:02

+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இந்தப் போட்டி இடம்பெறுகிறது.

இதில் நேற்றைய தினம் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆட்டநேர முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

அகில தனஞ்சய 16 ஓட்டங்களுடனும், ரங்கன ஹேரத் ஆகியோர் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் கேசவ் மஹாராஜ் 32 ஓட்டங்களுக்கு  8 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.







Exclusive Clips