இரண்டாவது டெஸ்ட் : அனைவரின் கவனத்தை பெற்ற 10வது விக்கட் இணைப்பாட்டம்!!

Saturday, 21 July 2018 - 11:44

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%3A+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+10%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21%21
இலங்கை மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிற்காக இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தனஞ்ஜய டி சில்வா 60 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

தனுஸ்க குணதிலக 57 ஓட்டங்களையும் , திமுத் கருணாரத்ன 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

நேற்றை ஆட்டநேர முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்தது. 

அகில தனஞ்சய , ரங்கன ஹேரத் ஆகியோர் களத்தில் இருந்த நிலையில் , இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமாது தொடக்கம் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தி அவர்கள் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை வலுப்படுத்தினர்.

அதன்படி , அகில தனஞ்சய ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் , ரங்கன ஹேரத்த 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் கேசவ் மஹாராஜ் 9 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.







Exclusive Clips