பங்களாதேஷ் அணி 48 ஓட்டங்களால் வெற்றி

Monday, 23 July 2018 - 13:20

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+48+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 48 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 279 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால் ஆட்டமிழக்காது 130 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களையே பெற்றது.

இதன்படி மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.








Exclusive Clips