தொடரை கைப்பற்றியது இலங்கை!

Monday, 23 July 2018 - 13:35

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 275 ஓட்டங்களையும் பெற்றது.

தென்னாபிரிக்கா அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களையும் பெற்றது.

இதற்கமைய இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

 அதன்படி, இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றி கொண்டுள்ளது.



rnrn









Exclusive Clips