%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
Sunday, 12 August 2018 - 20:43
இறுதிப்போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி
4,372

Views
சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அணியின் தலைர் அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 24.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

அணி சார்பில் அணித்தலைவர் குயின்டன் டிகொக் அதிகபட்சமாக 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி வீரர் அகில தனஞ்ஜெய 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 3க்கு 2 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE