%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
Monday, 13 August 2018 - 8:35
தொடரை கைப்பற்றியும் அதிர்ச்சிக்குள்ளான தென்னாப்பிரிக்க அணி
31

Shares
3,763

Views
இலங்கை கிரிக்கட் அணியுடனான ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்ட நிலையில், ஒருநாள் கிரிக்கட் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணி பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த தொடர் ஆரம்பிக்கும் போது தென்னாப்பிரிக்க அணி 113 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் இருந்தது.

தொடரை 3க்கு2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றிய போதும், இறுதி இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டநிலையில் 3 புள்ளிகளை இழந்து 110 புள்ளிகளுடன் நான்காம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

4ம் இடத்தில் இருந்த நியுசிலாந்து 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதேநேரம் இலங்கை அணி 3 புள்ளிகளை அதிகமாக பெற்று 80 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 8ம் இடத்திலேயே இருக்கிறது.

இந்த தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து முதலாம் இடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE