%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
Monday, 13 August 2018 - 10:20
இலங்கை அணியின் மூன்று முக்கிய வீரர்கள் தொடர்பில் வெளியான தகவல்
5,620

Views
தனுஷ்க குணதிலக, ஜெஃப்ரி வண்டர்சாய் மற்றும் லலித் மலிங்க ஆகிய மூன்று வீரர்களுக்கும் மீண்டும் இலங்கையின் தேசிய கிரிக்கட் அணியில் இடம்பிடிக்க முடியும் என்று, இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

2019ம் உலகக் கிண்ணம் மற்றும் 20க்கு20 உலக கிண்ணம் ஆகிய கிரிக்கட் தொடர்களுக்கு, இலங்கை அணியில் உள்ளடக்கப்பட வேண்டிய வீரர்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இதற்காக ஒப்பீட்டு ரீதியில் வீரர்களை தெரிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில் தற்போது அணித் தெரிவாளர்களால் அணிக்குள் உள்வாங்கப்படாதுள்ள தனுஷ்க குணதிலக, ஜெஃப்ரி வண்டர்சாய் மற்றும் லலித் மலிங்க ஆகியோர் குறித்தும் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே தமது கருத்து என்று அவர் தெரிவித்துள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE